Sunday, February 9, 2020

இயற்கையாய் கருத்தரிக்க - உணவே மருந்து



சிகிச்சைக்கு தம்பதியர் வருவது எப்போது?
வேலை காரணமாக பிரிந்து வாழும் தம்பதியர், சேர்ந்து வாழும் தம்பதியர் – ஒரு வருடம் முதல் ஒன்றரை வருடம் வரை (18 மாதங்கள்) கழித்து சிகிச்சைக்கு வரலாம்.

இயற்கை முறையில் கருத்தரிப்பது எவ்வாறு?

கருவுறும் காலம் (தீட்டு தேதியில் இருந்து 12 முதல் 16ஆம் நாட்களுக்குள்)
கருமுட்டை வெடித்து வெளியாகும். இந்த நேரத்தில் தம்பதியர் உடலுறுவில் இருக்கும் போது இயற்கையாய் கருதரிக்க வாய்ப்புகள் உண்டு. இவற்றை தாண்டி கருதங்காத போது, மருத்துவரை நாடி தேவையான சில ஹார்மோன் பரிசோதனைகள், இரத்தப் பரிசோதனைகள், கர்ப்பபை மற்றும் அதை சார்ந்த உறுப்புகளின் நிலைகளை பரிசோதனை செய்து கொள்ளலாம். இவற்றில் இருவருக்கும் எந்தவித குறைகளும் இல்லாத போது Follicular Tracking எனப்படும் கருமுட்டை வளர்வதையும் வெடிப்பதையும் ஸ்கேன் பரிசோதனை மூலம் கண்டறிந்து அந்த நேரத்தில் தம்பதியர்
சேரும் போது கருத்தரிக்க வாய்ப்பு உள்ளது.

இதில் ஆணுக்கும் பெண்ணுகுக்கு உயிரணுக்கள் குறைபாடு இருப்பின்,
அதை சரி செய்ய குறைந்தது 90 நாட்கள் ஆகும். வேறு ஏதும் குறைகள் இருந்தால், காலம் தாழ்த்தாமல் நாம் மருத்துவரை அணுகும் போது, அவைகள் விரைவாக சீர் செய்யப்பட்டு இயற்கையாய் குழந்தைபேறு அடைய வழி வகுக்கும். ஆணுக்கு உயிரணுக்கள் குறைபாடு இருப்பின், இந்த 90 நாட்களில் Anti Oxidants எனப்படும் உடலில் உள்ள கழிவுகளை அழிக்கிற அல்லது நீக்க உதவுகிற ஒரு துணை மருந்துகள், பெண்ணின் கர்ப்பபை, ஜனன உறுப்புகள், கருவணுக்குழாய்கள் போன்றவற்றில் ஏதேனும் பாதிப்புகள் இருந்தால் இந்த 90 நாட்களில் அதை சரி செய்ய முதல் கட்ட நடவடிக்கையாக antibiotic என்னும் மருந்துகள் கொடுக்கப்படும்.

அடிப்படையான மேற்கூறிய இந்த சிகிச்சையின் மூலமாகவும் கருதங்காத போதும் அடுத்த கட்ட சிகிச்சையான IUI சிகிச்சைக்கு தம்பதியர் அறிவுறத்தப்படுவர்.

Contact : Dr.Nirmala Sadasivam
Genesis IVF Hospital is Located in Both Erode & Coimbatore
Call us now : 93627-55550 / 93627-77770 / 85 85 85 50 85

Erode - Genesis IVF Advanced Fertility Clinic
Maaruthi Medical Center & Hospitals,
MMCH, 564, Perundurai Road, Erode-638011. Tamil Nadu.
Mobile: 93627-55550 / 93627-77770 / 85 85 85 50 85
http://www.1testtubebaby.com/

Coimbatore - Genesis IVF Advanced Fertility Clinic
PRICOL, 9-B, Caledon Square, 348, Avinashi Road, Peelamedu, Coimbatore - 641004.
Mobile: 85 85 85 56 85

Saturday, January 18, 2020

குழந்தையின்மை, ஜெயிப்பது எப்படி?

 


           வணக்கம். ஜெனிசிஸ் IVF Advanced Fertility Clinic–ன் அறிவியல் இயக்குனரான Dr.நிர்மலா சதாசிவம் ஆகிய நான், இன்று குழந்தையின்மை (அ) மலட்டுதன்மை குறித்து சில கருத்துகளை பரிமாற போகிறேன்.
           இந்த குழந்தையின்மை என்பது கடந்த 20 வருட காலமாக 4 மடங்காக உயர்ந்துள்ளது. WHO எனப்படும் உலக சுகாதார ஆய்வகம், சமீபத்தில் எடுத்த கணக்கெடுப்பில், 2% முதல் 3% இருந்த இந்த குழந்தையின்மை (அ) மலட்டுதன்மை, 30 வருட காலகட்டத்திற்குள் 10% முதல் 15%மாக உயர்ந்துள்ளது என்று தெரிவித்துள்ளது. இதற்கான காரணங்களை நாம் ஆராய்ந்தால், நாகரிக வளர்ச்சி, நகரமயாக்கல், தொழில்மயமாதல் போன்றவற்றால் ஏற்படும் மாசுயடைந்த காற்று, தேவையில்லாத உரங்கள், பூச்சி மருந்துகளால் உற்பத்தி செய்யப்படும் உணவுகள் தான் முக்கிய காரணிகளாக உள்ளது. நாம் தற்போது உண்ணக்கூடிய பிராய்லர் கோழியில் காணப்படும் Phyto estrogen எனப்படும் ஹார்மோன், மாசுயடைந்த காற்றிலும் பரவி இருப்பதாக ஆய்வுகள் கூறுகிறது.
           இது போன்ற காரணங்களால், பெண் குழந்தைகள் 11 முதல் 12 வயதிலிலேயே பூப்படைந்து விடுகிறார்கள். இதனால் மிக இளம் வயதிலேயே அவர்களுக்கு மாதாந்திர இரத்தப்போக்கும். கருமுட்டை உற்பத்தியும் தொடங்கி விடுவதால், 30 வயதிற்குள் அவர்கள் குழந்தையின்மை நிலையை அடைந்து விடுகிறார்கள். இதே போல் ஆண்களும் இந்த Phyto Estrogen–ஆல் ஆண் உயிரணுக்களின் உற்பத்தி குறையும் அல்லது குறைபாடு உள்ள உயிரணுக்களாக உருவாகும்.
           இவற்றை நமது உணவு பழக்கவழக்கம், வாழ்க்கை முறை, சுற்றுச்சூழல்களை மாற்றி அமைப்பதன் மூலமாக சரி செய்ய வாய்ப்புள்ளது. ஒரு சில விஷயங்கள், அதாவது கைபேசி, அதனால் வரும் அலைக்கதிர், வாகனத்தால் ஏற்படும் மாசு இவற்றை மாற்ற முடியாவிட்டாலும், முடிந்தவற்றை நாம் மாற்றி அமைக்க வேண்டும். குழந்தையின்மை பொருத்தவரை நாம் உட்கொள்ளும் உணவு சமசீரான உணவாக, அதாவது புரதசத்து, மாவுசத்து, கொழுப்புசத்து போன்ற அனைத்தும் ஒவ்வொருவருடைய எடை, உயரம் ஆகியவற்றை வைத்து கணக்கிடப்படும் BMI (உடல் எடை குறியீடு) மூலம் நமது குடும்ப மருத்தவரிடமோ அல்லது உணவு கட்டுபாட்டு நிபுணரிடமோ கலந்தாலோசனை செய்து, சரியாக வழிமுறைபடித்தி தொடர்ந்து வந்தால், இந்நிலையை நாம் சரி செய்யலாம்.
           Obesity எனப்படும் உடல் எடை அதிகமாக இருப்பது பெண்களுக்கு PCOD எனப்படும் கருப்பைச் சார்ந்த குறைபாட்டையும், ஆண்களுக்கு உயிரணு குறைபாட்டையும் ஏற்படுத்தும். இந்த Obesity ஆனது, இருபாலருக்கும் பொதுவானது. உணவு கட்டுபாடு இல்லாதது, ஒரே இடத்தில் நீண்ட நேரம் உட்கார்ந்து வேலை செய்வது, அதிக வெப்பம் அல்லது வெளிச்சத்தில் வேலை செய்வது, கடினமான வேலை செய்வது போன்றவை குழந்தையின்மைக்கான சில காரணங்களே.
           உணவு மாற்றத்தைப் பொருத்தவரை அவரவர் உடல் நிலைக்கு தகுந்தவாரு பச்சை காய்கறிகள், கணிகள், வேக வைத்த இறைச்சி, முட்டை போன்றவற்றை சரியான விகிதத்தில் உட்கொண்டு, நல்ல உறக்கம், மன அமைதிக்கு யோகா போன்றவற்றை வழிமுறைபடுத்தி கொண்டு வந்தால், நம் உடலில் சுரக்கும் ஹார்மோன்கள் சரியான விகிதத்தில் சுரந்து குழந்தையின்மை நிலையை மாற வழி செய்யும்.
           நல்ல உறக்கத்திற்கு கூம்பு சுரபி என்னும் சுரபி சுரக்கும் Melatin என்னும் ஹார்மோன் மிகுந்த உதவி செய்யும். இது நமது இளமை பருவத்தை தக்க வைக்க உதவும் ஹார்மோன் ஆகும். இது நம் ஆழ்ந்த உறக்கத்தின் போது சுரக்கும் ஹார்மோன் ஆகும். செயற்கையாக இதற்கு மருந்துகள் இருந்தாலும், இயற்கையாய் சுரக்கும் ஹார்மோன்களே சிறந்தது. இளமை பருவத்தை தக்க வைப்பதால் கருமுட்டை உற்பத்தி உயிரணு உற்பத்திக்கு இந்த ஹார்மோன் உதவுகிறது.
           ஆகவே நமது உணவு பழக்கம், நல்ல ஆழ்ந்த உறக்கம் ஆகியவற்றை மேற்கொண்டு, நம் உடலையும் மனதையும் அமைதியாக மாற்றிக் கொண்டால், இந்த குழந்தயின்மை நிலையை மாற்ற முடியும்.

Contact : Dr.Nirmala Sadasivam
Genesis IVF Hospital is Located in Both Erode & Coimbatore
Call us now : 93627-55550 / 93627-77770 / 85 85 85 50 85

Erode - Genesis IVF Advanced Fertility Clinic
Maaruthi Medical Center & Hospitals,
MMCH, 564, Perundurai Road, Erode-638011. Tamil Nadu.
Mobile: 93627-55550 / 93627-77770 / 85 85 85 50 85
http://www.1testtubebaby.com/

Coimbatore - Genesis IVF Advanced Fertility Clinic
PRICOL, 9-B, Caledon Square, 348, Avinashi Road, Peelamedu, Coimbatore - 641004.
Mobile: 85 85 85 56 85